Premium WordPress Themes

Tuesday, 22 March 2011

பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்


டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.

01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

04. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

05. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

06. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

07. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

08. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

09. தொலைபேசியில் உரையாடும் போது அவதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.

Monday, 7 March 2011


எம்.வி.சன்.சி தமிழ் அகதிகளுக்கு வழக்கில் வெற்றி

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா சென்றவர்களின் புகலிட அந்தஸ்த்துகோரும் வழக்கில் அவர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வெறுமனே இருந்த தொடர்பு அவர்கள் அதன் உறுப்பினர்கள் என்பதை நிரூபிக்கப் போதுமானதல்ல என்று இந்த விசாரணையை நடத்திய சபை தெரிவித்துள்ளது.

இதனால் தமிழர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்புவது கனடாவின் சமஷ்டி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களுள் சுமார் 30 பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் என்று கருதப்பட்டது.

இந்தக் கப்பல் மூலம் சுமார் 490க்கும் அதிகமான இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசித்திருந்தனர்.